அமைச்சர் சஜித், டான் வளாகத்திற்கு விஜயம்

என்ரபிறைஸ் ஸ்ரீலங்கா மூலம், வடக்கில் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

என்ரபிறைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, டான் தொலைக்காட்சி கலையகத்திற்கு விஜயம் செய்த வேளை இடம்பெற்ற விசேட நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிங்கள மொழியிலான யாழ். ரிவி தொலைக்காட்சியினை டான் ரிவி குழுமம் ஆரம்பிப்பதையிட்டு, எனது மகிழ்ச்சியினை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மங்கள சமரவீர அவர்களின் எண்ணத்தில், மிகவும் சிறப்பாக இந்த எண்டபிறைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.

குறிப்பாக யாழ்ப்பாண பிரதேச இளைஞர் யுவதிகளின், வாழ்கையின் அபிவிருத்தியில் இந்த கண்காட்சி பங்களிப்பினை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

சாதாரண வட்டியுடன் கூடிய கடன், மிகவும் இதில் கூடிய பங்களிப்பினை வழங்குகின்றது. அமைச்சர் எரான் விக்கிரமரத்தின, இந்த முயற்சிக்கு தனது ஊக்கத்தினை வழங்கியிருக்கின்றார்.

உண்மையில் இந்த வேலைத்திட்டம் தொடர்பில் நான் சந்தோசம் அடைகின்றேன். நாட்டின் பொருளாதாரம் உயர்வடைவதற்கு இது ஒரு ஊன்று கோலாக இருக்கும் என நினைக்கின்றேன்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. வௌ;வேறு பகுதிகளில் அது குறைவாக கூடாக அமையலாம். ஆனாலும் 30 வருடம் யுத்தம் நடைபெற்ற வடக்கு கிழக்கு பிரதேசங்களில், பிரச்சினைகள் அதிகமாக காணப்படுகின்றது.

அரசியல், பொருளாதார, இனப்பிரச்சினை இவைபோன்ற அனைத்திற்கும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தினை பகிர்வதன் ஊடாக தீர்வினைக் காண முடியும். அந்த இலங்கையினை அடைவதே எனது நோக்கமாக இருக்கின்றது. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!