மட்டு, சத்துருக்கொண்டான் படுகொலையின் நினைவு தினம்

மட்டக்களப்பு சதுத்ருக்கொண்டான் படுகொலையின் 29 ஆவது ஆண்டு நினைவு தினம், சத்துருக்கொண்டான் சந்தியில் உள்ள நினைவுத்தூபியருகே, இன்று மாலை உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.


இதன் போது, நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 திகதி, இராணுவத்தினருடன் இணைந்து ஊர்க்காவல் படையினரால், சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கற்பிணித் தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள், அங்கவீனம் அடைந்தவர்கள் என 186 பேரை அழைத்துச் சென்று படுகொலை செய்யப்பட்டனர்.

இதில் 5 கைக்குழந்தைகள், பத்து வயதுக்கு குறைவான 42 சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 186 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனை நினைவுகூரும் வகையில், படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே, நிகழ்வு நடத்தப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் உறவினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான விசாரணைகள் நடைபெற்ற போதும், இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித தண்டனைகளும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!