அதிகாரப் பகிர்வை வழங்க தயார் : சஜித்

ஒரே நாட்டிற்குள், அதிகளவான அதிகாரப் பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்குவதுடன், மாகாண சபையை பலப்படுத்தி, அதற்கான அதிகாரங்களை வழங்க தயார் என, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எண்டபிறைசஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி, யாழ். முற்றவெளியில் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றது.

இங்கு விஜயம் செய்த அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம், நீங்கள் அதிகாரத்தை கைப்பற்றினால், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு எந்தவிதமான தீர்வினை வழங்குவீர்கள் என, ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட போது, இவ்வாறு பதிலளித்தார்.

ஒன்றை உறுதியாக சொல்லிக் கொள்ள வேண்டும். வெளிநாட்டில் ஒரு கதை வந்ததன் பிற்பாடு இன்னொரு கதை என்று என்னிடம் எதுவும் கிடையாது.

ஒரே நாட்டிற்குள் அதிகளவான அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு, அதன் ஊடாக அரசியல் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, இனங்களுக்கு இடையிலான ஐக்கியம் போன்றவற்றை கட்டியெழுப்புவதை நோக்கமாக கொண்டிருக்கின்றேன்.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகூடிய அதிகாரப் பகிர்வை வழங்குவேன். 13வது திருத்தச்சட்டம் ஊடாக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் முழுiயாக வழங்கப்படவில்லை.

உண்மையில் மாகாண சபை பலப்படுத்தப்படவில்லை. மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. 13வது திருத்தச்சட்டம் ஊடாக ஏற்படுத்தப்பட்டவை அனைத்தும் நகைசுவையாக மாறியிருப்பதாகவே நான் பார்க்கின்றேன்.

13வது திருத்தச் சட்டம் ஊடாக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபையையும் அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் பலப்படுத்தி, அதன்மூலமாக மக்களுக்கான சிறந்த சேவைகளை முன்னெடுக்க எண்ணியுள்ளேன். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!