சஜித்தின் வருகை தாமதமானதால் சூடான மக்கள்!

கிளிநொச்சியில், அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட நிகழ்வு, சுமார் 3 மணி நேரத்தின் பின்னர் ஆரம்பமாகிய காரணத்தினால், மக்களில் ஒரு பகுதியினர் வெளியேறிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கிளிநொச்சியில், அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்துகொள்ளும் நிகழ்வுகள் சில ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்வு, 3 மணி நேரத்தின் பின்னர் ஆரம்பமாகியது.

இதனால் சோர்வடைந்த மக்களில் ஒரு பகுதியினர், மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

இதேவேளை, அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வில் மக்கள் அமர்ந்திருந்த பகுதியும் கடுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், நிகழ்விற்காக தம்மை காலையிலேயே ஏற்றி வந்ததாகவும், மிக நீண்ட நேரமாகியும் நிகழ்வு ஆரம்பமாகாத நிலையில், தாம் வீடுகளுக்கு செல்வதாகவும், மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு, 2.00 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்ட போதிலும் 5.00 மணியளவிலேயே ஆரம்பமானதாக, எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!