மட்டு, காத்தான்குடியில், ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் திறந்துவைப்பு!

மூன்றரை கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கான ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம், இன்று ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானாவினால் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் இந்த ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சின் பண்பு அறிவு மற்றும் வலுமிக்க மனித நேய மாணவச் சந்ததியினரை உருவாக்கும் நோக்கில் அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், இந்த ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நிலையத்தினை ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா திறந்து வைத்ததுடன் அதன் நினைவுப் பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்தார்.

இந்த வைபவத்தில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எஸ்.உமர்மௌலானா, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கான ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் முகாமையாளர் எஸ்.சரிப்தீன் உட்பட வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் கல்வி அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!