வவுனியாவில் விபத்து : ஒருவர் படுகாயம்

வவுனியா வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வவுனியா நகரில் இருந்து, திருநாவற்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், புகையிரத நிலைய வீதியில் சென்று கொண்டிருந்த போது, அருகிலிருந்து வீதிக்கு ஏற முற்பட்ட முச்சக்கரவண்டியுடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த, 45 வயதுடைய த.பிரகலாதன் என்ற குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!