வவுனியாவில், கற்றல் வள நிலையம் திறந்து வைப்பு!

வவுனியா சைவ பிரகாச ஆரம்ப பாடசாலையில், கற்றல் வள நிலையம், இன்று திறந்து வைக்கப்பட்டது.


அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற தேசிய கருத்திட்டத்தின் கீழ், கல்வி அமைச்சினுடைய 17 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

அதிபர் தியாகசோதி யுவராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், முதன்மை விருந்தினராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், கட்டடத்தை திறந்து வைத்தார்.

நிகழ்வில், வலயக் கல்வி அதிகாரி மு.இராதகிருஸ்ணன், பிரதி கல்வி பணிப்பாளர்களான சு,அமிர்தலிங்கம், பா,பாலசந்திரன், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!