திருமலையில், ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் திறந்து வைப்பு

பண்பு, அறிவு மற்றும் வலுமிக்க மனித நேய மாணவ சமூகத்தை உருவாக்கும் நோக்குடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் முன்னெடுக்கப்படும், அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலை திட்டத்தின் கீழ், திருகோணமலையில் அமைக்கப்பட்ட, ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம், இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.


புதிய கட்டடத்தை, பாராளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் திறந்து வைத்தார்.

2017 ஆம் ஆண்டுக்கு முன்னர், ஆசிரியர் வள நிலையம் எனும் பெயருடன் இயங்கி வந்த இக்கட்டடம், தேசிய வேலை திட்டத்தின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, நவீன தொழில்நுட்பவியல் கற்கை நெறிகளுடன் கூடிய, ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான மேம்படுத்தல், விரிவுபடுத்தல். மீள் பயிற்சி வழங்கல், தலைமைத்துவ பயிற்சி போன்ற பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், ஆசிரியர்களுக்கான நுட்ப முறை கற்பித்தல் நெறிகளை வழங்க, இந்த ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் ஊடாக வழங்கப்படுகின்றது.

ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு மேற்கொள்ளும் தடை தாண்டல் பரீட்சையின் போது, பரீட்டைக்கான விசேட பயிற்சிகளையும் வழங்க கூடியதாக உள்ளதாக, ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.

நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.மன்சூர் மற்றும் வலய கல்வி பணிப்பாளர் அருனந்தம் என, அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!