வடக்கில், தொழிற்பேட்டைகள் உருவாக வேண்டும் : சஜித்!

வடக்கு மாகாணத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டம் இங்கே கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊரெழுவில் அமைக்கப்பட்ட பொக்கணை மாதிரிக்கிராம வீடுகளை கையளிக்கும் நிகழ்விலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்று திறந்து வைக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் போன்று 2025ஆம் ஆண்டளவில் 20 ஆயிரம் வீட்டுத்திட்டங்களை நாடாளாவிய ரீதியில், மக்களுக்கு வழங்கி நாட்டிலே வாழும் அனைத்து மக்களுக்கும்; வீடுகளை வழங்குவதே எனது நோக்கமாக இருக்கின்றது. முதலாவது கட்டமாக 2500 வீட்டுத் திட்டங்ளை செப்டம்பர்மாத இறுதிப்பகுதிக்குள் முடிப்பதற்கு நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால் எங்களது திறமையாக அதிகாரிகளைக்கொண்டு நாங்கள் அவற்றை ஜூன் மாதமே நிறைவுக்கு கொண்டுவந்துவிட்டோம்.

எமது முதலாவது கட்ட வேலைத்திட்மாக ஒரு காணிக்குள் ஒரு வீடு என்ற வகையிலேயே செயற்படுத்தியுள்ளோம்.

இரண்டாவது மூன்றாவது கட்டங்களில் 1 காணிக்குள் 3 மாடிகளைக்கொண்ட குடியிருப்பாக அமைத்து வழங்க திட்மிட்டுள்ளோம். இந்த வேலைத்திட்டங்கள் ஜனவரிமாதம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

இதேவேளை வடக்கில் 772 வீட்டுத்திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றோம். இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் வடக்கு மாகாணத்திலேயே அதிகளாவான வீடுகள் அமைக்கப்பட்டுவருகின்றன.

இராஜாங்க அமைச்சர் விஜயகால மகேஸ்வரன் மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனும் வடக்கில் பல வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

வடக்கு மாகாணம் மிகவும் குறைவான வருமாணம்கொண்ட மாகாணமாகவுள்ளது.இதற்கு காரணம் நாட்டிற்கு 5 வீத வருமானத்தையே வடக்கு மாகாணம் ஈட்டித்தருவதாகும்.

இதற்க காரணம் வடபகுதியில் போதியளவு தொழில்பேட்டைகள் காணப்படாமையாகும் எனவே இவற்றை நாம் மேம்படுத்த வேண்டும்.

அப்பொழுதான் வடக்கில் வேலைவாயப்பினையும் பூர்த்திசெய்யக்கூடியதாக இருக்கும் இவ்வாறாக வருமானங்களை அதிகரிக்கும் முயற்சிகளுக்காகவே வடக்கில் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டம் இங்கே நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

இதேவேளை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு, வீடமைப்பு திட்டம் பெரும் உதவியாக உள்தென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சித்தார்த்தன் தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!