புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கட்டங்கள் திறப்பு!

அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்த்தின்கீழ், முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு கல்வி வலயத்தில், அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தின்கீழ் தெரிவுசெய்யப்பட்ட, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில், கல்வி அமைச்சினால் 3 கோடியே 55 இலட்சம் ரூபா செலவில் இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடமும், ஆசிரியர் விடுதிக் கட்டடமும், அதிபர் விடுதியும், உணவகமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளன. கட்டங்களை, பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீகந்தராஜா திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!