நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் இரண்டாந்தவணைக்காக இன்று திறக்கப்பட்டன.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் பின்னர் இன்று முஸ்லிம் பாடசாலைகள் மீளதிறக்கப்பட்ட போது பாதுகாப்பினை கருத்திற் கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் பாடசாலைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
75 முஸ்லிம் பாடசாலைகளைக்கொண்டமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில், சுமார் 80 வீதத்திற்கு மேற்பட்ட மாணவர்களும், 90 வீதத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் சமூகமளித்திருந்ததாக வலயக்கல்விப்பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர்மௌலானா தெரிவித்தார்.
பாடசாலைக்கு சமூகமளித்த மாணவர்களது புத்தகப்பைகள் ஆசிரியர்களது கண்காணிப்பில் உயர்தர வகுப்பு மாணவர்களினால் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
வலயக்கல்விப்பணிப்பாளர் பாடசாலைகளுக்கு நேரடியாக சென்று கற்றல் கற்பித்தல் பணிகள் ஆரம்பிக்கப்படுவதை கண்கூடாக உறுதிசெய்தார்.
அத்துடன் மாணவர்களது பாதுகாப்பு உறுதிப்பாட்டினையும் அவதானித்தார்.
இதேவேளை மாணவர்களினதுது வரவினை முழுமைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிபர்களுக்கு அவர் பணிப்புரை விடுத்தமை குறிப்பிடத்தக்கது . (சி)