அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால் டேனில் மெட்விடேவை வீழ்த்தி சம்பியனாகியுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரிங்க டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில்,  உலக தரவரிசையில் 2 ஆவது இடம் வகிப்பவரும், 18 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஸ்பெய்னின் ரபெல் நடால், தரவரிசையில் 5 ஆவது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீரர் டேனில் மெட்விடேவை எதிர்கொண்டார்.

சுமார் 4 மணித்தியாலங்களும் 50 நிமிடங்களும் நீடித்த இந்த ஆட்டத்தின் இறுதியில் நடால் 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் மெட்விடேவை வீழ்த்தி சம்பியன் ஆனார்.

இதன் மூலம் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ரபேல் நடால் வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது (சே)