42 ஆவது மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று  திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது.

இந்த மிகவு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இந்த கூட்டத்தொடர்  ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.

உறுதிமொழிகளுக்கு அமைவான பொறுப்புக்கூறலில் இலங்கையின் நம்பகத்தன்மை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கேள்வியெழுப்படலாம். மேலும் நிலையான பொறிமுறையொன்றின் கீழ் இலங்கையை கண்காணிக்கும் யோசனையை சிறப்பு அந்தஸ்துள்ள அமைப்புகள் கூட்டத்தொடரில் வலியுறுத்தவும் உள்ளன.

அதேபோன்று இந்த கூட்டத்தொடரின் போது சவேந்திர சில்வாவின் நியமனம் உள்ளிட்ட இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் எட்டுப்பேர் கொண்ட நிபுணர் குழுவின் கூட்டறிக்கை குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளன. (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!