யாழ், நீர்வேலியல் விபத்து : மூவர் காயம்

என்ரபிரைஸ் ஸ்ரீலங்க 2019 தேசிய கண்காட்சி நிகழ்வுக்கு வருகை தந்திருந்த நிதியமைச்சின் வாகனம் இன்று மதியம் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்துக்காக காத்து நின்ற மூவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிதியமைச்சின் வாகனம் நீர்வேலி கந்தசுவாமி கோயில் பகுதியில் உள்ள பாதசாரிகள் கடவையில் திருப்ப முற்பட்டபோது, முச்சக்கர வண்டியுடன் மோதி அருகிலிருந்த மதில் சுவருடன் மோதியது.

குறித்த விபத்தில், பேருந்துக்காக காத்து நின்ற மூவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!