மத்திய வங்கி கொள்ளையர்கள் எமது ஆடசியில் தண்டிக்கப்படுவர் : மஹிந்த

ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களில் மத்திய வங்கியை கொள்ளையடித்தது இந்த அரசாங்கம், ஆயினும் எமது அரசாங்கத்தில் மத்திய வங்கியை கொள்ளையடித்த அனைவரும் நீதிமன்றில் நிறுத்தப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது தேசிய மாநாடு கொழும்பில் இன்று நடைபெற்றில் இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக இளைஞர்கள் கொலைசெய்யப்பட்ட காலம் ஏற்பட்டது ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்தின் காலத்தில் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

மத்திய வங்கியை கொள்ளையிடுவதற்கு தற்போதய அரசாங்கத்திற்கு நீண்டகாலம் செல்லவில்லை. ஆட்சிக்கு வந்து இரண்டே மாதங்களில் மத்திய வங்கிளை கொள்ளையடித்துவிட்டார்கள். அந்த கொள்ளையடிப்புடன்தான் பணியை ஆரம்பித்தார்கள். ஆனால் நான் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

மத்திய வங்கியில் கொள்ளையிட்ட அனைவரையும் எமது காலத்தில் நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

ஐந்து வருடம் ஆட்சியில் இருக்கும் இவர்களால் நாட்டின் பௌதீகள வழங்களை விற்பனை செய்வதற்கு எந்தவத உரிமையும் இவர்களுக்கு கிடையாது. இந்த நாட்டு மக்களுக்கு சொந்தமான துறைமுகங்களை, விமான நிலைங்களை வருமானத்தினை ஈட்டுகின்றவற்றை அனைத்தையும் விற்பனை செய்கின்றார்கள். இதனை நிறுத்துவதற்கு நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோட்டபாய ராஜபக்சவை வெல்ல வையுங்கள்.

எமது அரசாங்கத்தில் வழங்களை விற்பனை செய்வதற்கு இடமளிகப் போவதில்லை என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்.

ஆட்சிக்கு வந்தவுடன் 19வது திருத்தச் சட்டத்தினை கொண்டு வந்து முழு நாட்டையும் இந்த அரசாங்கம் சீரழித்தது. இதனால் அதிகார மோதல் பல இருக்கின்றன.

பிரதமர் அதிகாரம், ஜனாதிபதி அதிகாரம் இது இரண்டும் முரண்படுகின்றது. நாட்டு மக்கள் துன்பப்படுகின்றார்கள். இரண்டு பேரும் மோதும்போதும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.

நாட்டின் பொருளாதாரம் கீழே போய்விட்டது. நாம் அதிகளவான கடனைப் பெற்றுவிட்டோம் நாடு கீழே போய்விட்டது என்று பொய் கூறிய அரசாங்கம். வெளிநாடுகளில் தாம் பெற்ற கடனை கொண்டு என்ன செய்தார்கள் என்பதும் என்ன இலாபத்தை கொண்டார்கள் என்பதும் தெரியாது இருக்கின்றது.

இது தொடர்பில் நாம் பேச வேண்டி இருக்கின்றது. சிந்திக்க வேண்டி இருக்கின்றது. இன்று நாம் வடக்குக்கு போனால் தெரிகின்றது. நாம் புனரமைத்த வீதிகளை தவிர வேறு ஒன்றும் அங்கு செய்யப்படவில்லை.

வடக்கு கிழக்கிலே நாம் செய்த அபிவிருத்திப் பணிகளை தவிர வேறு ஒன்றும் இதுவரையில் செய்யவில்லை. நாம் செய்ததை தவிர வேறு ஒன்றுமே வடக்கு கிழக்கில் செய்யப்படவில்லை என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

ஆனால் ரணில் மட்டும் தாம் அதிகளவான அபிவிருத்தியை நாட்டில் ஏற்படுத்திவிட்டோம் ஆனால் மற்றவர்களுக்கு அது தெரியவில்லை என்று கூறுகின்றார்.

நான் தோல்வியடைந்தபோது இரண்டு மணி நேரத்தில் எனது சொந்த இடத்திற்கு சென்றுவிட்டேன் உங்கள் தலைவர்கள் மீண்டும் என்னை அழைத்துவந்து இங்கே விட்டிருக்கின்றார்கள்.

ஆகவே இங்கே வீற்றிருக்கின்ற உங்கள் தலைவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தி இந்த நாட்டை அடிப்படைவாதிகள் உருவாக இடமளிக்காது அனைவரும் கைகோர்த்து பயணிப்போம், என தெரிவித்துள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!