சஜித்திற்கு ஆதரவான மாநாடுகள் நிறுத்தப்பட வேண்டும் : பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை களமிறக்கும் நோக்கிலேயே கட்சியின் அனைத்துக் கூட்டங்களும் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘அமைச்சர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

இல்லாவிட்டால், அவரின் இந்தப் பயணத்திற்கான ஆதரவை கட்சியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும்.

கட்சி இன்னும் அமைச்சர் சஜித் பிரேமதாசதான் ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை.

எனவே, இந்த விடயம் தொடர்பாக சஜித் ஆதரவாளர்கள் மாநாடுகளை நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று நாம் இறுதியாக இடம்பெற்ற உறுப்பினர்களின் கூட்டத்தின்போது கேட்டுக்கொண்டிருந்தோம்.

உண்மையில், ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை களமிறக்கும் தீர்மானத்திலிருந்தே ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

எனினும், சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவியை வழங்குவது தொடர்பாக இதுவரை தீர்மானமொன்று எட்டப்படவில்லை. அவ்வாறானதொரு தீர்மானத்திற்கும் நாம் அனுமதியளிக்கப்போவதில்லை.

யாராக இருந்தாலும் கட்சியின் கொள்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

இதனை மீறி செயற்பட்டு வருபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாக இருக்கிறோம்.

அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டுமெனில், வேறு அணியாகத்தான் அவர்கள் களமிறங்க வேண்டும்.

எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் விரைவில் பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது’ என தெரிவித்தார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!