தென்மராட்சி, வரணி இடைக்குறிச்சியில் சனசமூக நிலையம் திறந்து வைப்பு

தென்மராட்சி, வரணி இடைக்குறிச்சி மேற்கு நவா சனசமூக நிலையம் மற்றும் பனைசார் உற்பத்தி நிலைய திறப்புவிழா நேற்று நடைபெற்றது.

நவா சனசமூக நிலைய தலைவர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்து கொண்டார்.

நிகழ்விற்கு வருகைதந்த விருந்தினர்கள் சிறார்களின் பான்ட் வாத்திய இசையுடன் விழா இடத்திற்கு அழைத்துவரப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன், நிகழ்வுகள் ஆரம்பமாகின.

முதலில் நவா சனசமூக நிலையம் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து, பனைசார் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இரு நிலையங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் நவா சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினர்கள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!