‘என்ரபிறைஸ் சிறீலங்கா’ தேசிய கண்காட்சி!

‘என்ரபிறைஸ் சிறீலங்கா’ மூன்றாவது தேசிய கண்காட்சி நிகழ்வு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், யாழ்ப்பணம் முற்றவெளியில் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இலங்கை தொழில் நிறுவனங்களின் மூன்றாவது தேசிய கண்காட்சியை, நிதி மற்றும் ஊடக அமைச்சு நடாத்துகின்றது.
நேற்றையதினம் ஆரம்பமான தேசிய கண்காட்சி, நாளை மறுதினம் வரை நடைபெறவுள்ளது.

நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியன குறித்த கண்காட்சியில் மக்களுக்கு சேவைகளை வழங்கிவருகின்றன.
இதற்கமைய சிறிய மற்றும் நடுத்தர மக்களுக்கான குறைந்த வட்டியிலான கடன் திட்டங்கள், சிறு வியாபாரங்களில் ஈடுபடுபவர்களுக்கான கடன் திட்டங்கள், நாணயக்குற்றி விநியோகம், வேண்டுமென்றே சேதமாக்கப்பட்ட மற்றும் பழுதடைந்த நாணயத்தாள்கள் மாற்றம், ஊழிய சேமலாப நிதியம் தொடர்பான சேவைகள், இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளின் விற்பனை, நிதி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவை உட்பட பல சேவைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இந்த நிகழ்வின் ஊடாக, தொழில் முயற்சியாளர்களுக்கு பல உதவி திட்டங்கள் தொடர்பான விளக்கங்களும் வழங்;கப்படுகின்றன.

அந்தவகையில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், வர்த்தகர்கள், பொது மக்கள் குறித்த கண்காட்சியிலும் நடமாடும் சேவையிலும் பங்குபற்றி, பயனைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!