மட்டு, ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருவிழா நிறைவு.

மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தலத்தின் 65ஆவது ஆண்டு திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.


மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமான ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் வருடாந்த திருத்தல திருவிழா கூட்டுத் திருப்பலியினை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் பங்குதந்தை அன்டனி டிலிமா, அருட்தந்தை எ.தேவதாசன், அலெக்ஸ் ரொபட் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா பங்குதந்தை அன்டனி டிலிமா தலைமையில் கடந்த 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருத்தல திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை திருசெபமாலையும், மறைவுரைகளும், திருப்பலிகளும் இடம்பெற்றன.


ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் வருடாந்த திருத்தல திருவிழாவினை சிறப்பிக்கும் வகையில் நேற்று காலை மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இருந்து திருத்தலம் நோக்கிய பாத பாதயாத்திரை இடம்பெற்றதுடன் மாலை விசேட மறைவுரைகளுடன் திவ்விய நற்கருணை பவணியும் விசேட திருப்பலியும் ஒப்புகொடுக்கப்பட்டது.

இன்று காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டதுடன் திருப்பலியின் பின் திருத்தலத்தின் 65ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் ஆயர் மற்றும் அருட்தந்தையார்களினால் 65 பலூன்கள் பறக்கவிட்டு திருவிழா சிறப்பிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து அன்னையின் திருச்சுருவ ஆசீர்வாதம் வழங்கப்பட்டதோடு கொடியிறக்கத்துடன் திருத்தல வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது.

ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருத்தல திருவிழா திருப்பலியில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மாநகர முதல்வர் தி.சரவணபவன், வவுணதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதியிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள் என பலர் கலந்து கொண்டு திருவிழா திருப்பலியை சிறப்பித்தனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!