அம்பாறையில், தமிழ் ஊடகவியலாளர்களுக்கான சிங்கள மொழி கற்கை ஆரம்பம்.

அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான இலவச சிங்கள மொழி கற்கை, நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


இன்று தொடக்கம் 19ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 12 நாட்கள் இந்த கற்கை நெறி இடம்பெறவுள்ளது.

இலவச சிங்கள மொழி வகுப்புக்கள் தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேஷனின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படுகின்றன.

அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாரும் ஸ்மார்ட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவருமான கே.எம்.ரிஸ்கான் முகம்மட், இக்கற்கை நெறியினை அம்பாறை மாவட்ட ஊடகவிலாளர்களுக்கு வழங்கிவருகிறார்.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன், அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்களத்தின் பிரதம பொறியலாளர் ஏ.எம்.சகீர் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீத், மாவட்ட தமிழர் ஊடக மையத்தின் தலைவர் ரீ.தர்மேந்திரா, சிலோன் மீடியா போரத்தின் செயலாளர் எ.எஸ்.எம் முஜாஹீத் நுஜா, ஊடக ஒன்றிய செயலாளர் பைசல் இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!