தரவரிசை பட்டியலில் லசித் மலிங்கா முன்னேற்றம்!

ஐசிசி 20க்கு 20 சர்வதேச பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் லசித் மலிங்கா முன்னேறியுள்ளார்.

ஐசிசி 20க்கு 20 சர்வதேச பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா 20 இடங்களை தாண்டி 592 புள்ளிகளுடன் 21 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசி 20க்கு 20 சர்வதேச பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியல் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

நியூசிலாந்திற்கு எதிரான இறுதி 20 க்கு 20 போட்டியில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஐசிசி 20 க்கு 20 தரவரிசை பட்டியலில் 20 இடங்களை தாண்டி 592 புள்ளிகளுடன் 21 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ஓவர்களை வீசி 1 மெய்டின் ஓவர், 6 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு லசித் மலிங்கா வழியமைத்துக்கொடுத்தார்.

2011-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற மலிங்கா, சமீபத்தில் ஒரு நாள் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற லசித் மலிங்கா, தற்போது, 20 க்கு 20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!