ரணில் – சஜித் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் இன்று இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தையை நாளை மறுதினம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.

அதன்படி, குறித்த பேச்சுவாத்தையை இன்று அலரி மாளிகையில் நடாத்த திட்டமிட்டிருந்த போதிலும், அமைச்சர் சஜித் பிரேமதாச ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சி நிரல்கள் காரணமாக இன்றைய பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பேச்சுவார்த்தையை எதிர்வரும் செவ்வாய்க் கிழமை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!