மீண்டும் மலிங்க சாதனை – குவியும் பாராட்டுகள்

நியுசிலாந்திற்கு எதிரான மூன்றாவது ரி20  பேர்ட்டியில் இலங்கை அணியின் தலைவர் லசித்மலிங்கவின் பந்துவீச்சினை  புகழ்ந்து கிரிக்கெட் வீரர்கள் டுவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றன.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா வரலாற்றை உருவாக்கும் லசித் மலிங்க அற்புதமான பந்து வீச்சினை வீசியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

லசித்மலிங்க மேலும் மேலும் சிறந்த பந்து வீச்சாளராக மாறிவருகின்றார் என பர்வேஸ் மகரூவ் தெரிவித்துள்ளார்.

நான்கு விக்கெட்களை நான்கு பந்துகளில் வீழ்த்தி இரண்டாவது தடவையாக சாதனை நம்பமுடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமட் கைவ் தெரிவித்துள்ளார்.

லசித்மலிங்க தன்னால் செய்யக்கூடியதை இன்னமும் செய்கின்றார் என தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஸ்சொப்ரா அவரால் மாத்திரமே நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்களை வீழ்த்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.அவர் இருதடவைகள் இதனை சாதித்துள்ளார்,ஐந்து ஹட்ரிக்கினை எடுத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ள ஆகாஸ்சொப்ரா, வயது என்பது வெறுமனே ஒரு எண் மாத்திரமே எனவும  தெரிவித்துள்ளார்.

ரசல் ஆர்னோல்ட் இதனை ஏற்றுக்கொண்டள்ளார்.எப்படிப்பட்ட ஒரு ஜாம்பவான் என குருணால் பாண்டியா தெரிவித்துள்ளார்.

த கிரேட்டஸ்ட் லசித்மலிங்கவிடம் இன்னமும் அதே திறமையுள்ளது என தெரிவித்துள்ள வர்ணனையாளர் ஹர்சா போக்லே அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!