ஜனாதிபதி வேட்பாளராக சஜித் உறுதியாகி விட்டார்-ஹரின்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை களமிறக்குவது உறுதியாக உள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்தோடு, நாளைய தினம் இது தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் ஒன்று சஜித் பிரேமதாசவுடன் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
மேற்குறித்த தீர்மானத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் மட்ட தொண்டர்களின் ஆதரவு தற்போது பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இதன்போது தெரிவித்தார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!