ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் சஜித்-யாழில் மங்கள சமரவீர

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவே, என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்படும் ‘என்ரபிறைஸ் ஸ்ரீலங்கா” கண்காட்சியை பொதுமக்களின் பார்வைக்காக ஆரம்பித்து வைத்தார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த கேள்வி இன்று பலரிடையே காணப்படும் நிலையில், ஏற்கனவே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்டார்.

இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவே பிரேரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!