ஜனாதிபதி சரியான முறையில் ஆட்சியை முன்னெடுக்க வேண்டும்!

ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்தில் மூன்று குணங்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும் இருக்கும் காலத்தில் சரியான முறையில் தனது ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 49 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு விளாவூர் யுத்தம் எனும் தொனிப்பொருளில் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலை ஈஸ்வரா விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று சம்பியனாக வாகை சூடியுள்ளது.

32 அணிகள் பங்கு பற்றிய இவ் உதைபந்தாட்டசுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு கொக்கட்டிச் சோலை ஈஸ்ரா விளையாட்டுக் கழகமும் பன்சேனை உதய ஒளி விளையாட்டுக் கழகமும் தெரிவாகியிருந்தன.

நேற்று மாலை விளாவட்டவான் இராஜா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பன்சேனை உதய ஒளிவிளையாட்டுக் கழகத்திற்கு எதிராக கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக் கழகம் 4 கோல்களை போட்டு வெற்றி வாகை சூடியது.

தொடரின் 2 ஆம் இடத்தினை பன்சேனை உதயஒளி விளையாட்டுக் கழகமும், 3ஆம் இடத்தினை திருகோணமலை விக்பூட் விளையாட்டுக் கழகமும், 4 ஆம் இடத்தினை தாந்தாமலை ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகமும் சுவீகரிரித்துக் கொண்டன.

இறுதிப் போட்டியின் சிறந்த வீரனாக கொக்கட்டிச் சோலை ஈஸ்வரா அணியின் வீரர் இ.கீதனும், தொடரின் சிறந்த விரனாக பன்சேனை உதயஒளி அணி வீரர் எஸ்.வேதநாயகனும் தெரிவு செய்யப்பட்டனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணம் மற்றும் பணப்பரிசு வழங்கி வைக்கப்பட்டது.

ராஜா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் த.தயாபரன் தலைமையில் தலைமையில் நடைபொற்ற இறுதி நிகழ்விற்கு, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மண்முனை மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் செ.சண்முகாஜா,  வைத்திய கலாநிதி கே.முரளிதரன், முதலைக்குடா மகாவித்தியாலய அதிபர் த.கோபாலப்பிள்ளை வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆரியசேனா மற்றும் விளாவட்டவான் கிராமமட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!