இவ்வருடத்தினுள் 1000 ஞாயிறு பாடசாலைகள் நிர்மாணிக்கப்படும்

இவ்வருடத்தினுள் புதிதாக ஆயிரம் ஞாயிறு பாடசாலைகளை நிர்மாணிக்கவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புத்தளம் – வனாதவில்லவ பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், எமது குழந்தைகளின், பெற்றோர்களின் மற்றும் மதத்தலைவர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக தற்போது மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதா அல்லது எதிர்த்தரப்பினரின் விருப்பத்தின் படி இவற்றை கைவிடுவதா. எதிர்க்கட்சியின் பொறாமையாளர்களுக்கு, சுயநலவாதிகளுக்கு, மதம் தொடர்பில் உணர்வு இல்லாத நபர்களுக்கு செவிமடுக்க மாட்டேன்.

ஆனால் உங்களது யோசனைகள் தொடர்பில் இந்த சஜித் பிரேமதாச ஆயிரம் ஞாயிறு பாடசாலைகளை இந்த வருடத்தினுள் நிர்மாணித்து முடிக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளேன் என அமைச்சர் சஜித் பிரேமதாக தெரிவித்தார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!