முல்லைத்தீவு-ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு கலை, கலாசார விழா!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு கலை, கலாசார விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு கலை, கலாச்சார விழா ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் அகிலன் தலமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

ஒட்டுசுட்டான் பிரதான சந்தியில் இருந்து பண்பாட்டு கலை நிகழ்ச்சி அணி வகுப்புடன் ஊர்தி பவனி ஊர்வலமாக ஒட்டுசுட்டான் தான்தோன்றிஸ்வரர் ஆலய வளாகத்தை சென்றடைந்து அங்கு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் சிறந்த கலைஞர்களுக்கு பண்டார வன்னியன் நினைவுச்சின்னம் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கலைஞர்களினால் உருவாக்கப்பட்ட ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பாடல் இறுவட்டும் மாவட்ட செயலாளரினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

ஒட்டுசுட்டான் வரலாற்றை சித்தரிக்கும் முகமாக, முத்தொழில் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீகந்தராஜா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், இராணுவ பொறுப்பதிகாரி, மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.(நி)

 

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!