லசித் மலிங்க புதிய சாதனை!

நியூசிலாhந்து வீரர்களை அச்சுறுத்தி, புதிய சாதனை ஒன்றினை லசித் மலிங்க படைத்துள்ளார்.

தொடர்ச்சியாக நான்கு இலக்குகளை வீழ்த்தி, கிரிக்கெட் உலகில் புதிய சாதனை ஒன்றை இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க படைத்துள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது இருபதுக்கு இருபது போட்டி நேற்று கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணயற்சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரினை 2-0 என்ற வகையில் இலங்கை பறிகொடுத்திருந்த நிலையில், 3 ஆவது போட்டியில் ஆறுதல் வெற்றிபெறும் நோக்கில் இலங்கை அணி துடுப்பெடுத்தாட களம் நுழைந்திருந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு கடும் சவாலை வழங்கிய நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள், இருபதுக்கு இருபது தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் 125 ஓட்டங்களுக்குள் இலங்கை அணியை சுருட்டினர்.

துடுப்பாட்டத்தில் பலம்பொருந்தி நியூசிலாந்து அணிக்கு வெற்றிவாய்ப்பு உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே, இலங்கை அணி களத்தடுப்பில்
ஈடுபட்டது.

இந்நிலையில், போட்டியின் 3 ஆவது பந்துப்பரிமாற்றத்தை இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லிசித் மலிங்க வீசினார்.

3ஆவது பந்துப் பரிமாற்றத்தின் முதல் 2 பந்துகளையும் ஓட்டமற்ற பந்துகளாக மாற்றிய மலிங்க, 3 ஆவது பந்தில் கொலின் முன்ரோவை
போல்ட் முறையில் வெளியேற்றினார்.

தொடர்ந்து, 4ஆவது பந்தில் ஹமிஸ் ரதர்போர்டை எல்.பி.டபிள்யுஸ்ரீ முறையில் வெளியேற்றினார்.

5ஆவது பந்தில் கிரேண்ட் ஹோமை போல்ட் முறையில் வீழ்த்தி ஹட்ரிக் சாதனையை மலிங்க நிலைநாட்டினார்.

அத்தோடு, பந்துப்பரிமாற்றத்தின் இறுதிப்பந்தில் ரோஸ் டெய்லரை எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேற்றி இருபதுக்கு-20 போட்டியில் தொடர்ச்சியாக 4 இலக்குகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை மலிங்க நிலைநாட்டினார்.

லசித் மலிங்கவின் அபாரமான பந்து வீச்சு கைகொடுக்க இப்போட்டியில் நியூசிலாந்து அணி 88 ஓட்டங்களுக்குள் அனைத்து இலக்குளையும் இழந்து நியூசிலாந்த அணி மோசமான தோல்வியைச் சந்தித்தது.

லசித் மலிங்க இதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக 4 இலக்குளை வீழ்;;த்தி, ஒருநாள் போட்டிகளிலும்
சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!