யாழ், சாவகச்சேரியில் விபத்து : இளைஞன் பலி

யாழ். சாவகச்சேரி – ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில், இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்தச் சம்பவம், இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்த தனியார் சொகுசு பேருந்துடன், மோட்டார் சைக்கிளில் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த, 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சடலம் சாவகச்சே;ரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பில், சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!