ஐ.தே.க வேட்பாளர் மக்களால் தெரிவு : மங்கள

ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டி தேவை இல்லை எனவும், ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரை மக்கள் தெரிவு செய்துவிட்டார்கள் எனவும், நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த வேளை, அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது இவ்வாறு குறிப்பிட்டார்.

எண்டப்பிறைசஸ் சிறிலங்கா யாழ் நகரிலே நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. நான்கு தினங்களுக்கு இது நடைபெறும்.

இதற்கு முன்னராக அனுராதபுரம், மொனராகலை, பிரதேசங்களில் இதனை மேற்கொண்டிருந்தோம்.
அவை சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

ஆனபோதும் இது யாழ் நகரில் இடம்பெறுவது இதுவரை நடைபெற்றவையை விட சிறப்பானது. யாழ் குடாநாட்டு இளைஞர் யுவதிகளுக்கான வாழ்வாதரங்களை வேலை வாய்ப்புக்களை அருகில் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றோம்.

அனைத்து வங்கிகளும் இந்த நிகழ்வு நடைபெறும் பகுதியில் நான்கு தினங்களும் சிறப்பு வங்கிகளை அமைத்திருக்கும்.

இதனைவிட மேலும் பல சிறப்பு நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன. 7ம்8ம்9ம்10ம் திகதிகளில் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு நான் வேண்டுகின்றேன்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள்? உண்மையை சொல்வதானால், ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை இந்த நாட்டு மக்கள் தெரிவு செய்து முடித்துவிட்டார்கள். அவர் செல்லும் இடங்களில் மக்கல் திரண்டு அவரை தெரிவு செய்து விட்டார்கள்.

மக்கள் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக வர வேண்டும் என்று விருப்பம் கொண்டிருக்கின்றார்கள். அதனை மாத்தறையில் கண்டோம், பதுளையில் கண்டோம் நேற்றயதினம் மகிந்த ராஜபக்சவின் தொகுதியான குருநாகலில் பெருந்திரளான மக்கள் அணி திரண்டு கோரிக்கை வைத்ததை கண்டோம்.

நான் தற்போது புகையிரத்தில் வரும்போது பார்த்தேன். வடக்கு மாணத்திற்கு சஜித் பிரேமதாச செய்த பணியின் புகைப்படங்களை வீதிதோறும் கண்டேன்.

எனவேதான் நான் நினைக்கின்றேன் யு.என்.பி கட்சி ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டிய தேவை இல்லை ஏன் எனில் மக்கள் வேட்பாளரை தெரிவு செய்து விட்டார்கள்.

ஆகவே மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து வேட்பாளரை வெற்றியடை செய்யும் பணிகளை ஆரம்பிக்க இருக்கின்றோம். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!