யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


உயர் கல்வி அமைச்சினால், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு பெயர் பட்டியலுக்கு எதிராக, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்திற்கான ஆட்சேர்ப்பு பட்டியலில், வடக்கு மாகாணத்தை சேர்ந்தோர் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக, எமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பாதது ஏன் என, பல்கலைக்கழக ஊழியர் சங்க உறுப்பினர் கலாராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பல்கலைக்கழகத்திற்கான ஆட்சேர்ப்பு பட்டியலில், உயர் கல்வி அமைச்சில் பதிவை மேற்கொண்ட, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தோரின் பெயர் பட்டியல் நிராகரிக்கப்பட்டு, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஆதரவாளர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள் எனவும், இதற்கு எதிராக நாம் குரல் கொடுக்கின்ற போதும், எமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பது ஏன்? என, கவலை வெளியிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!