கூட்டமைப்பின் கோரிக்கை நிறைவேறாது : மஹிந்த

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றாது என, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீதிக்கான குரல் என்ற தொனிப்பொருளில், கொழும்பு பத்தரமுல்லையில் ரணில் – மைத்திரி தலைமையிலான அரசாங்கத்தில் பழிவாங்கலை எதிர்கொண்ட அரச அதிகாரிகளுக்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மாநாடு ஒன்றை இன்று நடத்திய வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைத்த போது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேசமும், சஞ்சிகைகளும் அதைப்பற்றிதான் பேசிக்கொண்டிருந்தன.

ஸ்ரீலங்காவுக்கு பிரபல்யத்தை அந்தத் துறைமுகம் தேடித்தந்தது. ஆட்சியின் பின் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் முறைமுகத்தை கொடுக்கின்றனர். திருகோணமலையை கொடுக்கவுள்ளனர். கிழக்கு முனையை சிங்கப்பூர் உள்ளிட்ட இரண்டு நாடுகளுக்கு கொடுக்கின்றனர்.

பொறுப்புகளிலிருந்து அரசாங்கம் கைகழுவுகிறது. ஒருபுறத்தில் சொத்துக்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்.

குறிப்பிட்ட நாடுகளிலிருந்து என்னிடம் விசாரிக்கின்றனர், ஆனால் எமது கொள்கை சொத்துக்களை விற்பனை செய்வதல்ல.

முன்னர் ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் விற்பனை செய்யப்பட்டதை நாங்களே மீளப் பொறுப்பேற்றோம்.
இப்போது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு அவர்களுக்கே படுகுழியாகிவிட்டது.
எனது சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்கின்றனர்.

உலகில் பணக்காரர் மஹிந்த ராஜபக்ச. ஓர் அமைச்சர் கூறுகிறார் அதனை தாம் பார்த்ததாக. அதில் ஒரு டொலரையேனும் கண்டுபிடித்தால் தருவதாகவே கூறுகிறேன்.

அன்று நீதிமன்றக் கட்டமைப்புக்கு அழுத்தம் கொடுத்ததாக எங்கள் மீது குற்றஞ்சாட்டினார்கள். ஆனாலும் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒருபோதும் நான் பேசியதில்லை. அது பச்சைப்பொய்.

ஆனால் ஊழல் மோசடி ஆணைக்குழு முன்னாள் அதிகாரி அல்லது ஓய்வு பெற்ற அதிகாரிகளிடமே கதைத்திருக்கின்றேன்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சி துண்டு துண்டுகளாகப் பிரிந்துள்ளது. கட்சித் தலைவருக்கு சக உறுப்பினர்கள் கவனிப்பதில்லை.

உறுப்பினர்கள் வேறு வழியில் செல்கின்றனர். ஒருசிலர் இரண்டாகப் பிளவடைந்ததாகவும், இன்னும் சிலர் மூன்றாகப் பிரிந்ததாகவும் கூறுகின்றனர்.

எந்த வழியிலும் எந்த வேட்பாளர் வந்தாலும் நாங்களே நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பதை அறிவிக்க விரும்புகின்றேன்.

வடக்கில் அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை பாதுகாத்து வந்தது.
அரசாங்கத்தைப் பாதுகாக்க கூட்டமைப்பு எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒப்பந்தங்களை செய்தது.

இப்போது சமஷ்டி அல்லது தனியான அரசாங்கம் பற்றி பேசப்படுகிறது. இந்த அரசாங்கமும் அதனை வழங்குவதாகக் கூறுகிறது.

ஆனால் 4 வருடங்களாகியும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவில்லை. இதெல்லாம் எப்போதும் நிகழாத விடயங்களாகும்’ என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!