தற்கொலை எண்ணமா? 1333ஐ தொடர்புகொள்ளவும்!

1333 எனும், தற்கொலைக்கு எதிரான இலவச உள ஆலோசனைக்கான தெலைபேசி இலக்கத்தை, மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக, பல்வேறு நிகழ்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


அந்த வகையில், திருகோணமலையில் நேற்று விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில், நாள் ஒன்றுக்கு 8 பேர் வரை தற்கொலை செய்து வருகின்றனர்.

இதனை தடுக்கும் முகமாக, 1333 எனும் அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்து, கடந்த 10 வருடங்களாக செயற்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அந்த இலக்கத்தை மக்கள் மத்தியில் பதியச் செய்யும் முகமாக, இம் முறையும் கடந்த 29 ஆம் திகதி கொழும்பில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டம், நேற்று திருகோணமலையை அடைந்தது.

13 நாட்களாக இடம்பெறும் சைக்கிள் ஓட்டம், மீண்டும் கொழும்பை அடையவுள்ளது. இந்த நிலையில், திருகோணமலை றொட்டறிக் கழகமும் இணைந்து 4 வது வருடமாக, மக்களுக்காக பணியாற்றி வருகிறது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!