நுவரெலியாவில் தொடரும் குளவிக்கொட்டு : 55 தொழிலாளர்கள் பாதிப்பு

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலா நோர்வுட் ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லொய்னோன் லின்போட் தோட்டபகுதியில் 35பெண் தொழிலாளர்கள் மற்றும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் எல்பட மேல்பிரிவு தோட்டபகுதியில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 20 பெண் தொழிலாளர்கள் உட்பட 55 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் பத்து மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு தோட்ட மக்களும் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த போது தேயிலை மலையின் அடிவாரத்திலும், மரத்திலும் இருந்த குளவி கூடு கலைந்து தொழிலாளர்களை தாக்கியதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

காயங்களுக்கு உள்ளான 55 தொழிலாளர்களும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் குறித்து கவலையடைய தேவையில்லை என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!