திருமலையில், புகைப்பட கலைஞர்கள் கௌரவிப்பு!

திருகோணமலை புகைப்பட கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் புகைப்படங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

திருகோணமலை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தினருடைய ஏற்பாட்டில், திருகோணமலை நகரசபை திறந்த மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.


புகைப்பட கலைஞர்கள் சங்கத்தினருடைய அங்கத்தவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், திறந்த போட்டியாளர்கள் எனும் பிரிவுகளில் இடம்பெற்ற புகைப்பட போட்டியில் வன விலங்கு காட்சிகள் மற்றும் இயற்கை எனும் தலைப்புகளின் கீழ் போட்டிகள் இடம்பெற்றன.


இப் போட்டியில் தொழில்முறை கேமரா மற்றும் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தன.
போட்டிகளில் பிரிவுகள் ரீதியாக வெற்றி பெற்ற கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், சர்வதேச ரீதியாக கௌரவிக்கப்பட்ட புகைப்படங்களும் காட்சிப்படுத்தபட்டுள்ளன.


திருகோணமலையில் புகைப்பட கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக இப் போட்டிகள் இரண்டாவது தடவையாக இடம் பெறுவதாக புகைப்பட கலைஞர்கள் சங்கத்தினருடைய செயலாளர் தெரிவித்தார்.


இந் நிகழ்விற்கு விருந்தினர்களாக திருகோணமலை நகரசபை தலைவர் என்.ராசநாயகம், திருகோணமலை பிரதேச சபை தவிசாளர் பி.குணாலன், திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி து.அருளானந்தம், தேசிய புகைப்படம் மற்றும் கலை சங்கத்தினுடைய பணிப்பாளர் நிரஞ்சன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!