இந்த அரசில் குறைகள் இருக்கின்றது -அமைச்சர் ராஜித

நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு அளித்த சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் ராஜிதா சேனரத்ன தெரிவித்திருக்கின்றார்

மொனராகலயில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

நாம் அந்த இருண்ட காலத்தை மாற்ற எவ்வாறு பாடுபட்டோம் என்பதை இன்னும் மறக்கவில்லை அதன் பின்னர் தான் மக்களுக்கான ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் உரிமைகளை பெற்றுக்கொடுத்தோம் என்றும் கூறினார்

வடக்கில் வாழும் மக்கள் இன்று வீதிக்கு இறங்குகிறார்கள்.போராட்டங்களை நடத்துகின்றார்கள் , சத்தியாகிரகம் செய்கினறனர் மற்றும் பேரணி செல்கின்றனர் எவ்வளவு அருமையாக இருக்கின்றது ? அவ்வளவு சுதந்திரத்தை வழங்கியுள்ளோம்.

பதவிகளை பெற்ற பின் அரசியல் வாதிகள் கொள்கைகளை மாற்றினாலும் மக்கள் மாற போவதில்லை.

நாங்கள் ஒருபோதும் எங்கள் கொள்கைகளை மாற்றபோவதில்லை. நாங்கள் மக்களிடம் சொன்னதை செய்வதற்காக போராடுகிறோம். அதற்காக நாங்கள் எந்த துன்பத்தையும் எதிர்க்கொள்வோம் எங்களால் கொலைகாரர்கள் மற்றும் திருடர்களை இன்னும் பிடிக்க முடியாவில்லை அதில் நாங்கள் தோல்வி கண்டு இருக்கிறோம் அதை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்த அவர்

மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனால் மீண்டும் அவர்களுக்கு வாக்குறுதிகளை வழங்கக்கூடாது அதுதான் என்னுடைய நிலைப்பாடு என்றும் இதன் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!