தொல்பொருட்களை பாதுகாக்குமாறு அமரபுர மாகானிக்காய தேரர்கள் தொல்பொருள் திணைக்களத்திடம் இறுக்கமான கோரிக்கை

அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பூசிக்கப்பட்டு வரும் புராதன பௌத்த தொல்பொருள் இடமாக இருக்கும் முகுதுமஹா விரையையும் அங்கு உள்ள தொல்பொருள் அடையாளங்கள் நிறைந்துள்ள புனித பூமியையும் அழிவில் இருந்து பாதுகாக்குமாறு அரசாங்கத்திடமும், தொல்பொருள் திணைக்களத்திடமும் மிகவும் இறுக்கமான கோரிக்கை ஒன்றினை விடுவதாக அமரபுரமாகாகிக்காய தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை பொத்துவில் முகுதுமஹா விகாரையில் நேற்று வியாழக்கிழமை மாலை (05) இடம்பெற்ற தேரர்களின் ஊடக சந்திப்பின் போதே மேற்படி கருத்துனை தெரிவித்துள்ளனர்.

இங்கு அமரபுரமாகாகிக்காய தேரர்கள் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,

பொத்துவில் முகுதுமஹா விகாரை பூனித பூமியானது சுமார் 2000ம் ஆண்டுகளுக்கு மேலாக இங்கு பூசிக்கப்பட்டு வந்துள்ளதுடன் இந்த இடமானது துட்டுகெமுனு மன்னனின் தாய் மாயாதேவி வந்து இறங்கிய இடமாக உள்ளது.

இப் பிரதேசத்தில் ஆதியில் சுமார் 300 ஏக்கர் நில விஸ்தரிப்பில் இந்த புனித பூமி காணப்பட்டு இருந்தன.இதனைத் தொடர்ந்து 1951 தைமாதம் 26ந் திகதி 10ஃ205 இலக்க கலாநிதி பரணவித்தாரன அவர்களின் கருத்தின் படி 72ஏக்கர் 03றுட் 13பேர்ச்சஸ் காணி வர்த்த மானியில் வெளியீடப்பட்டு இருந்தன.

இதனைத் தொடர்ந்து 1965 ஆண்டு வர்த்தமானியில் 30 ஏக்கர் காணியும், 03றுட்டும் 2பேர்ச்சஸ்யும் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது முதலில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 72 ஏக்கர் காணியையும் பொத்துவில் முகுதுமஹா விரைக்கும் தொல்பொருள் பிரதேசத்திற்கும் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கமும் தொல்பொருள் திணைக்களமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் உள்ள தொல்பொருள் திணைக்களத்தின் சட்டங்கள் மிகவும் இறுக்கமானது உதாரணமாக சோமாவதி விகாரையில் அதன் விகாராதிபதி மலசலகூடம் ஒன்றினை கட்டுவதற்காக குழி ஒன்றினை வெட்டிய போது அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன ஆனால் இங்கு பெரும் எண்ணிக்கையான தொல்பொருள்கள் அழிக்கப்பட்ட வருகின்ற போதிலும் தொல்பொருள் திணைக்களம் எந்தவிதமான சட்ட நடவடிக்கையையும் எடுக்காது இருப்பது ஏன் என்று கேள்விகளும் பௌத்த தேரர்களால் எழுப்பப்பட்டு இருந்தன.

இந்நிலையில் கலாசாரத்திற்கும் வீடமைப்பு நிர்மாணத்துக்கும் பொறுப்பாக உள்ள அமைச்சர் இந்தப் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு விகாரைக்கு சொந்தமான பூனித பூமியில் வசிக்கும் மக்களுக்கான வீடுகளை முகுதுமஹா விகாரபுரம் எனும் பெயரில் பொருத்தமான இடத்தில் வீடுகளை நிர்மாணித்து அவர்களை குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இப்பிரதேசத்தில் சுற்றியுள்ள மக்களினால் மணல் மேடுகள் அழிக்கப்பட்டு வருவதுடன் இங்கு உள்ள பெரிய விகாரைக்கும் சேதம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதுடன் தொல்பொருட்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனை உடனடியாக அரசும் தொல்பொருள் திணைக்களம் மற்றும் இப்பகுதி பிரதேச செயலாளர் ஆகியோர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வெண்டும் என்றும் இந்த பொத்துவில் முகுதுமஹா விகாராதிபதிக்கு துணையாக அமரபுரமாகாகிக்காய தேரர்கள் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தனர்.

பொத்துவில் முகுதுமஹா விகாரைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இருந்த 15க்கும் மேற்பட்ட அமரபுரமாகாகிக்காய பௌத்த பிக்குகள் விகாரை அமைந்துள்ள அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்வையிட்டதுடன் புகைப்படங்களையும் எடுத்து கொண்டு இருந்ததுடன் விஜயத்தின் முடிவில் விகாரை மண்டபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினையும் நடாத்தி இருந்ததுடன் மேற்குறிப்பிடப்பட்ட கருத்தக்களையும் தெரிவத்து இருந்தனர்.

 

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!