அர்ஜின் மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பில் ஆராயப்படும் -சிங்கப்பூர்

மத்திய வங்கி முன்னால் ஆளுநர் அர்ஜின் மகேந்திரனை நாடு கடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகள் எழுத்து ஆவணம் கிடைக்க பெற்றதுடன் ஆராயப்படும் என சிங்க க்புர் அரசங்கம் தெரிவித்துள்ளது

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சை மேற்கொள் காட்டி ”த ஸ்டேட் டைம்ஸ்” பத்திரிகை செய்தி வெளியிடுள்ளது

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதியிலிருந்து தகவல்கள் மற்றும் எழுத்து மூலம் ஆவணம் கோரப்பட்ட போதும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எழுத்து ஆவணம் கிடைக்கபெற்றதும் சிங்கப்பூர் சட்டத்துக்கு அமைய அர்ஜின் மகேந்திரனை நாடு கடத்தப்படுவது தொடர்பாக ஆராயப்படும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது

2015ம் ஆண்டு பிணைமுறி மோசடி தொடர்பில் மத்திய வங்கி முன்னால் ஆளுநர் அர்ஜின் மகேந்திரன் மீது குற்றம் சுமத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

அதேவேளை இவர் தொடர்பாக சிங்கப்பூர் அரசாங்கத்திடம் 21 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணம் ஒன்றை சாட்டமா அதிபர் வெளிவிவகார அமைச்சிடம் கையளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!