100வது வெற்றியை பதிவு செய்தார் செரீனா

அமெரிக்க பகிரிங்க டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் வாங்கியாங் ஐ வீழ்த்திய செரீனா, அமெரக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் 100 ஆவது வெற்றியை பதிவுசெய்துள்ளார்.

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், சீனா வீராங்கனை வாங்கியாங் ஐ எதிர்கொண்டார்.

சுமார் 44 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வாங்கியாங் ஐ வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்குள் நுழைந்தார்.

இந்த வெற்றி மூலம் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் 100 ஆவது வெற்றியை செரீனா பெற்றுள்ளார்.

இதுவரை செரீனா பங்கேற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று மற்றும் இரண்டாவது சுற்றில் தலா 19 முறையும், மூன்றாவது சுற்றில் 18 முறையும், நான்காவது சுற்றில் 16 முறை வெற்றி பெற்றிருக்கிறார்.

காலிறுதிப் போட்டியில் 13 முறையும், அரையிறுதியில் ஒன்பது முறையும் செரீனா வெற்றி வெற்றிபெற்றுள்ளதுடன், இதுவரை அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளார்.

தற்போதைய வெற்றி மூலம் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் 100 ஆவது வெற்றியை செரீனா ருஷித்துள்ளார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!