மருந்துகளுக்கு தட்டிட்டுப்பாடு இல்லை -பணிப்பாளர் சுதர்சன தெரிவிப்பு

அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக  அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுவதனை ஏற்றுக்கொள்ள  முடியாது. என்று சுகாதார  அமைச்சின் மருந்துபொருள்  விநியோக பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ரி. சுதர்சன  தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில்  இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின்  போது ஊடகவியலாளர் எழுப்பிய  கேள்விக்கு  பதிலளிக்கையிலேயே   அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

ஏனெனில் எந்த வைத்தியசாலையிலும் அவ்வாறான  மருந்துத்தட்டுப்பாடு நிலவவில்லை. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிடும் வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள்  இவ்வாறானதொரு முறைப்பாட்டை எம்மிடத்தில்  முன்வைக்கவில்லை

நாட்டிலுள்ள எந்த  வைத்தியசாலையிலேனும்   மருந்துப்பொருட்களுக்கு  தட்டப்பாடு  நிலவும் பட்சத்தில் அந்த  குறைபாட்டடை  உடனடியாக  நிவர்த்தி செய்யும் வகையில் சுகாதார அமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாக  திட்டமொன்றை வகுத்துள்ளதாகவும்.

முன்னர் காணப்பட்ட முறைமைக்கு மேலதிகமாக இந்த  முறைமையை  அமுல்படுத்தியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின்  மருந்து விநியோக பிரிவின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் டீ.ஆர்.கே ஹரத் இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!