சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலை

பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அரச நிறுவனங்களின் ஊழல் மோசடி குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாக உள்ளார்.

விவசாயத்துறை அமைச்சு நடாத்திச் செல்லப்படும் கட்டிடம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொள்வதற்காக பிரதமரின் செயலாளருக்கு இவ்வாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டிடம் குத்தகை அடிப்படையில் விவசாயத்துறை அமைச்சினை நடாத்திச் செல்வற்காக பெறப்பட்டுள்ள நிலையில், அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி பத்திரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த வர்த்தமானி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆணைக்குழுவிற்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!