கிழக்கு பல்கலையில், காணாமல் ஆக்கப்பட்ட மாணவர்களுக்கு நினைவேந்தல்.

1990 ஆம் ஆண்டு, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து, விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின், 29 ஆவது ஆண்டு நினைவேந்தல், மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில், இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


பல்கலைக்கழக வளாகத்தின் முன் பாதாதைகளை ஏந்தியவாறு, தமது உறவுகளுக்கு நீதி கோரி கவனஈர்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

உறவுகள் மற்றும் மாணவர்கள், காணமால் ஆக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்து மௌன இறை வணக்கம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினர்.

1990 ஆம் ஆண்டு நடுப்பகுதியில், அரச படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர் ஊக்கிரமடைந்த நிலையில், உயிர் அபாயம் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழக முகாமில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தஞ்சமடைந்திருந்தனர்.

இதன் போது, படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!