அரசியல் அதிகாரம் ஒரே குடும்பத்திற்கு மாத்திரம் இல்லை : சஜித்

ஐக்கிய தேசிய கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கம், உறுப்பினர்கள் எவருக்கும் இல்லை என, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று மாலை, குருணாகலில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

2020 ஆம் ஆண்டு, சாதாரண மக்களை மையப்படுத்திய அரசாங்கமே அமைக்கப்படும். அரசியல் அதிகாரம் ஒரு குடும்பத்திற்கு மாத்திரம் உரித்துடையது என்று எவரும் உரிமைப்பத்திரம் எழுதிக் கொடுக்கவில்லை.

குடும்ப ஆட்சியை மீண்டும் உருவாக்கி பலவீனமடைந்துள்ள அரசியல் நிலையை பலப்படுத்தவே ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றார்கள். இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. என குறிப்பிட்டார்.

இதேவேளை, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அஷோக அபேசிங்கவினால், குருணாகல் மாவட்டத்தின் சத்தியவாதி மைதானத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சருமான சஜித் பிரமேதாசவை வரவேற்கும் பொது மக்கள் கூட்டம், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டத்தில், நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி பெரேரா, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துலவல, அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான துஷார இந்துநில், இந்திக பண்டாரநாயக்க ஆகியோரும், ஐக்கிய தேசிய கட்சியின் குருணாகல் மாவட்ட தொகுதி அமைப்பாளர்கள், பிரதேச மற்றும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இன்று மாலை 4.00 மணியளவில் கூட்டம் ஆரம்பமாகியிருந்த போதிலும், 5.30 மணியளவிலேயே அமைச்சர் சஜித் பிரேமதாச மைதானத்திற்கு வருகை தந்திருந்தார்.

இதன் போது, கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் சஜித் பிரேமதாசவின் புகைப்படத்துடனான பதாதைகளை ஏந்தியவாறு ‘அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாச’ என்று கோஷம் எழுப்பியவாறிருந்தமை குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!