கோட்டாவுக்கே ஆதரவு : திஸ்ஸ விதாரண

ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்து, நாட்டை மீட்க வேண்டும் என, லங்கா சம சமாய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

லங்கா சமசமாய கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்சவின் வெற்றிக்காக பணியாற்றுவதற்கு தீர்மானித்திருக்கின்றது.

எமது நாட்டினை அந்நியர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுப்பதற்கு அவரின் வெற்றி தேவையாகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி முதலாளித்துவ வர்க்க நாடுகளுடன் இணைந்து எமது நாட்டின் பொருளாதாரத்தினையும் கீழ் மட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றது.

மறுபுறும் வெளிநாட்டு இராணுவத்தினர் எமது நாட்டில் முகாங்களை அமைப்பதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்றது.

இதுபோன்ற செயற்பாடுகளை தோற்கடித்து நாட்டை மீட்டெடுக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்போது வந்திருக்கின்றது.
இடதுசாரிக் கொள்கையுடன் எமது எண்ணங்களுடன் கோட்டபாய ராஜபக்சவுடன் நடாத்திய சந்திப்பில் இணக்கப்பாடு எட்டியிருக்கின்றோம். அதனை நிறைவேற்றுவதற்கு அவர் சம்மதம் வெளியிட்டிருக்கின்றார்.

நாட்டினை பாதுகாப்பதற்காக முழுமையான ஆதரவினை அவருக்கு வழங்கி மாபெரும் வெற்றியினை ஏற்படுத்துவதற்கு நாம் பாடுபடுவோம். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!