பிரதமரினால் வேட்பாளர் பெயர் முன்மெழிவு!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரமளவில் அறிவிப்பார் என, அக்கட்சியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், விவசாய இராஜாங்க அமைச்சருமான வசந்த அளுவிஹாரே தெரிவித்துள்ளார்.

இன்று, கண்டியில் ஊடகவியலாளர்களை சந்தித்த வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.

‘ஜனாதிபதி தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் தேர்தல் குறித்து அறிவிப்பொன்றை ஊடகங்களுக்கு விடுத்திருக்கின்றார்.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெற்றி பெரும் வேட்பாளர் ஒருவரையே களமிறக்குவோம்.

விசேடமாக கட்சியின் மத்திய செயற்குழு, பாராளுமன்றக் குழு என்பவற்றை அழைத்து முடிவெடுக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தி இருக்கின்றோம்.

உண்மையிலேயே ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. பிரதமருடன் நாளை அல்லது நாளை மறுதினமும் கலந்துரையாடல் உள்ளது.

பெரும்பாலும் அடுத்த வாரம் ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்படலாம். முதலாவது கட்சிக்குள் ஒழுக்கமொன்று இருக்க வேண்டும்.

ஒரு கருத்தை வெளியிட முன் கட்சி குறித்து யோசனை செய்ய வேண்டும். கட்சியின் தலைமைப்பீடத்தை விமர்சித்தால் முன்நோக்கி எம்மால் நகர முடியாது.

ஜனாதிபதி வேட்பாளர் நியமிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு விமர்சனங்களை அனுமதிக்க முடியாது.
கீழ் மட்டத்தில் ஆதரவாளர்கள் கோருகின்ற நபரை வழங்க வேண்டும்.

அவர் சஜித்தாக இருந்தால் அவரையே முன்நிறுத்த வேண்டும். ஜனாதிபதி தேர்தலை நாம் வெல்ல வேண்டும்.

செயற்குழு மற்றும் பாராளுமன்றக் குழு முன்வைக்கும் யோசனையை பரிசீலனை செய்து, பிரதமரின் ஆசிர்வாதத்துடன் முன்வைக்கப்படும் வேட்பாளரை சபாநாயகர் அதனை உறுதிப்படுத்துவார்.

பிரச்சினையை ஐக்கிய தேசியக் கட்சி வெகு விரைவில் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

பிரச்சினை தீர்ந்த பின் அனைவரையும் ஒருங்கிணைத்து புதிய சக்தியுடன் 2015 ஆம் ஆண்டில் ஒன்றிணைந்த சக்திகள் மற்றும் அதனை மிஞ்சுகின்ற சக்திகளுடன் இணைந்து வெற்றியை நோக்கி நகர வேண்டும்.

நாளை நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தையில் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கின்றோம்’
என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!