நுவரெலியா லிந்துலையில், 24 தொழிலாளர்களுக்கு குளவிக் கொட்டுக்கு!

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதில், 24 பேர் நுவரெலியா லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேரம் தோட்டம் தலங்கந்தை பிரிவில், தேயிலை தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, இன்று மாலை 3.00 மணியளவில், குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 6 பேர், சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், மேலும் 18 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும், வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதில் 4 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 3 ஆண்களும், 21 பெண்களும் அடங்குகின்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!