சஜித் செயும் செலவு வீண் செலவு – தாரக பாலசூரிய

சஜித் பிரேமதாச 3.2 பில்லியன் பணத் தொகையை செலவு செய்ததுக்கான எந்த ஆதாரமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் தாரக பாலசுபலாசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று பொதுஜன பெரமுன நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்

தோடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…

சஜித் பிரேமதாச அவருடைய சொந்த பணத்தையோ அல்லது அவருடய அப்பாவின் பணத்தையோ செலவிடவில்லை.

அவருடைய விருப்பத்திற்கு நாட்டின் பணத்தை செலவு செய்ய முடியாது அதற்க்கு என்று ஒரு முறை இருக்கின்றது, நாட்டி இப்போது ஒரு பொருளாதார நெருக்கடி இருக்கின்றது ஆனால் அவர் நாட்டின் பொருளாதாரத்தை யோசிக்காமல் தன்னுடைய புகழாரத்திற்காக பணத்தை செலவு செயகின்றார்.

எமது வேட்பாளர்க்கும் அவருக்கு உள்ள வித்தியாசம் இதுதான். அவருடைய ஊடக சந்திப்பின் போது பின்னால் அவருடைய படத்தை போடவேண்டிய தேவை இல்லை. காரணம் அவர் முன்னால் இருக்கின்றார் சில வேளை மக்கள் அவருடைய முகத்தை மறந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில் அப்படி செயகிறாரோ தெரியவில்லை.

எங்களுடைய கோட்டாபய ராஜபக்கசை அப்படி செய்வது இல்லை மக்களுக்கு அவரை நினைவு இருக்கின்றது.

காலம் மாறியிருக்கின்றது அனால் இன்னும் சஜித் பிரேமதாச மாறவில்லை அவர் தன்னுடைய அப்பாவின் அரசியலை தான் செயகின்றார்.

அதனால் தான் அரசாங்கத்தின் அப் பணத்தை செலவு செய்கின்றார், ஏழைகளை பற்றி பேசுகிறார் ஆனால் நடைமுறையில் இல்லை, இதுவரை அவர் இலங்கை அரசியலை அமைப்பு தொடர்பாக பேசவில்லை, மக்களுடைய பிரச்சினைகள் தொடர்கான பேசவில்லை. என தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!