யாழ், பலாலி விமான நிலையம் தொடர்பில், உயர் மட்ட கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய புனரமைப்பு மற்றும் விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில், உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்று, இன்று நடைபெற்றது.


யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில், பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இந்த கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராச, எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது, புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்தி, விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!