புறக்கணிக்கப்படும், முல்லை பாலைப்பாணி கிராம மக்கள்!

முல்லைத்தீவு பாலைப்பாணி கிராமத்திற்கான பிரதான வீதி புனரமைக்கப்படாமை, போக்குவரத்து வசதியின்மை, தொழில் வாய்ப்பின்மை போன்றவற்றினால், பிரதேசத்தில் வாழ்ந்து வரும் 50 ற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படும் பாலைப்பாணி கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த கால யுத்தம் காரணமாக, அதிகளவான மக்கள் இடம்பெயர்ந்து, இந்தியாவின் தமிழகத்திற்கு சென்றுள்ளனர்.

யுத்தத்தின் பின்னரான மீள்குடியர்வை அடுத்து, கிராமத்தில் 50 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேறி, 9 ஆண்டுகளாகிய நிலையிலும், கிராமத்திற்கான பிரதான வீதியாக காணப்படும், வன்னிவிளாங்கும் – மூன்று முறிப்பு வீதி, இதுவரை புனரமைக்கப்படவில்லை என, மக்கள் கவலை வெளியிட்டனர்.

அத்துடன், கிராமத்தில் தினமும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல், பாடசாலைகளுக்கு தினமும் 9 கிலோமீற்றர் தூரம் காட்டு பாதை வழியாக செல்லும் மாணவர்களுக்கு யானைகளின் அச்சுறுத்தல் என்பவற்றை சுட்டிக்காட்டிய மக்கள், தொழில் வாய்ப்புக்கள் இன்றி வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!